ஃபோர்ப்ஸ் இதழினின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் வெளியீடு..!

ஆண்டுதோறும் வெளியிடப்படும் ஃபோர்ப்ஸ் இதழின் டாப் 100 பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல இதழான ஃபோர்ப்ஸ், ஆண்டுதோறும் இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அவற்றினை பிரபலங்களின் ஆண்டு வருமானம், பத்திரிகை மற்றும் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்து கணக்கிடப்படுகிறது.

அந்த வகையில் 2019ம் ஆண்டுக்கான டாப் 100 பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தாண்டுக்கான பட்டியலில் ரூ.252.72 கோடி வருமானத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 2-ம் இடமும்,

கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த சல்மான் கான் தற்போது 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.

நடிகர் அமித்தாப் பச்சன், கிரிக்கெட் வீரர் தோனி, ஷாருக்கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இந்த 100 பேர் கொண்ட பட்டியலில் தமிழக திரையுலக பிரபலங்களான ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் சங்கர், சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்புராஜ், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

டாப் 100 பட்டியலில் தமிழக பிரபலங்கள்:

 • ரஜினிகாந்த் – 13வதுஇடம்
 • ஏ.ஆர்.ரகுமான் – 16வதுஇடம்
 • விஜய் – 47வதுஇடம்
 • அஜித்குமார் – 52வதுஇடம்
 • இயக்குநர் சங்கர் – 55வது இடம்
 • கமல்ஹாசன் – 56வது இடம்
 • தனுஷ் – 64வது இடம்
 • சிறுத்தை சிவா – 80வது இடம்
 • கார்த்திக் சுப்பராஜ் – 84வது இடம்

இந்த பட்டியலில் விளையாட்டுத் துறையை சேர்ந்த வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.

 • விராட் கோலி – 01வது இடம்
 • தோனி – 05வது இடம்
 • சச்சின் – 09வது இடம்
 • ரோஹித் சர்மா – 11வது இடம்
 • ரிஷப் பண்ட் – 30வது இடம்
 • ஹர்திக் பாண்ட்யா – 31வது இடம்
 • பும்ரா – 33வது இடம்
 • கே.எல்.ராகுல் – 34வது இடம்
 • ஷிகர் தவான் – 35வது இடம்
 • ரவிந்திர ஜடேஜா – 51வது இடம்
 • குல்திப் யாதவ் – 61வது இடம்
 • பி.வி.சிந்து – 63வது இடம்
 • சாய்னா நேவால் – 81வது இடம்
 • மேரி கோம் – 87வது இடம்
 • மித்தாலி ராஜ் – 88வது இடம்
 • ஸ்மிர்தி மந்தனா – 90வது இடம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே