பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் 8 அணிகள் காலியாக உள்ள 73 இடங்களை நிரப்புவதற்கு நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் 146 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 332 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வழக்கமாக 2 நாட்கள் நடைபெறும் ஏலம் இந்த முறை ஒரே நாள் மட்டுமே நடைபெறுகிறது.
அதிகபட்சமாக ஆஸ்திரியாவை சேர்ந்த வீரர்கள் 35 பேர் ஏலப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
ஏலத்தில் செலவிட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 42 கோடியே 70 லட்சம் ரூபாயை கையிருப்பாக வைத்து இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 5 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும். அந்த அணியிடம் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் கையிருப்பாக உள்ளது.
இன்றைய ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், கிறிஸ் லின், கம்மின்ஸ், மேற்கிந்திய தீவுகள் அணியில் வில்லியம்ஸ், இங்கிலாந்தின் ஏர் மோர்கன் உள்ளிட்டோர் முக்கிய வீரர்களாக உள்ளனர்.
இந்திய வீரர்களை பொறுத்தவரை ராபின் உத்தப்பா, ஜெய்தேவ், மோஹித் சர்மா, யூசுப் பதான் உள்ளிட்டோர் ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரர்களாக இடம் பிடிப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பெரியசாமி, சாய் கிஷோர், ஷாரூக்கான் ஆகியோர் இன்று ஏலம் போவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.