நிவர் புயல் எதிரொலியால் தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறி அதிதீவிரப் புயலாக வலுவடையும் என்றும், தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொதுவிடுமுறைக்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது. அரசின் கீழ் இயங்கும் வாரியங்கள், நிதி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே