தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளது – சு.வெங்கடேசன்

தமிழகத்தில் நான்கு புதிய இரட்டை ரயில் வழிப்பாதை திட்டத்திற்கு வெறும் நான்காயிரம் ரூபாய் மட்டுமே மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாக மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறையில் தமிழகத்திற்கான புதிய திட்டங்களுக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சித்தார்.

இதன்மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக தெரிவித்த சு.வெங்கடேசன், குறைந்த நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து முறையிட உள்ளதாக குறிப்பிட்டார். 

தெற்கு ரயில்வேக்கும், மற்ற ரயில்வே நிர்வாகத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் எனவும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே