திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

திண்டுக்கல் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட்டில் பெருமாள்கோவில்பட்டி, ஆவாரம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பூக்களை விற்பனை செய்து வருகின்றனர்.

கல்லறை திருநாள் மற்றும் தொடர் முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

நேற்று 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ விலை உயர்ந்து ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஒரு கட்டு ரோஜா 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கரட்டான் பூ ஒரு கிலோ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரு நாட்களில் 60 டன் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே