பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற அவசியம் இல்லை – அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை போரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பொள்ளாச்சி விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மஹா புயல் காரணமாக நடுக்கடலில் சிக்கி தவித்த அனைத்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என்றும், அரசு நிதிசுமையில் இருக்கிறது என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களில் நடிகர் விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்து வருவதை சுட்டிக்காட்டிய செய்தியாளர்கள், ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர் என கூறப்படுவது பற்றி கேள்வி எழுப்பினர்.

ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிப்பு ஏற்படுமானால் மத்திய அரசுக்கு அது தொடர்பாக வலியுறுத்த தமிழக அரசு தயராக உள்ளது என்றும், சிறு வியாபாரிகளை பாதிக்காத வகையில் அரசு எப்போதும் நடவடிக்கை எடுக்கும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே