சென்னை கோயம்பேட்டில் முதற்கட்டமாக 1500 கடைகளை மூட உத்தரவு!

சென்னை கோயப்பேடு காய்கறி சந்தையில் ஏற்கனவே காய்கறி வியாபாரி, சலூன் கடைக்காரருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து பூ வியாபாரிக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையை 3ஆக பிரித்து கோயம்பேடு, கேளம்பாக்கம், மாதவரம் ஆகிய பகுதிகளில் கடைகளை அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். 

இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, பின்னர், சென்னை மாநகர் ஆணையர் பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், 1900 கடைகளில் 600 கடைகள் மட்டும் சரியான சமூக இடைவெளியோடும், உரிய விதிகளுக்குட்பட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், அமைந்தகரை பகுதியில் 450 சிறிய கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

மே 1ஆம் தேதி முதல் 850 பழக்கடைகள் மூடப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் கோயம்பேடு சந்தையை மூடும் நிலைமை வந்துவிடும் எனவும் குறிப்பிட்டார்.

இதற்கு வியாபாரிகள் சம்மதம் தெரிவித்ததாக குறிப்பிடபடுகிறது.

இந்நிலையில், கோயம்பேடு சிறு வியாபாரிகள் கோயம்பேடு மாநகராட்சி விதித்த நிபந்தனைகளுக்கு மறுப்பு தெரிவித்து 1,500 சிறு கடைகள் மூடப்படும் என தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே