தஞ்சை மாவட்டத்தில் 20 கிராமங்களுக்கு ‘சீல்’

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 20 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த, டெல்லி மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேஷியா, பெங்களூரு, மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 38 பேர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவில் பணியாற்றும் கும்பகோணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஏற்கெனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிய அதிராம்பட்டினம், நெய்வாசல், கும்பகோணம், அண்ணலக்ரஹாரம், மேலத்திருப்பூந்துருத்தி பகுதிகளைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர்கள் வசிப்பிடங்கள், சுற்று வட்டார கிராமங்கள் என 20 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, டெல்லியில் தனியார் இணையதள செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஊரணிபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் வந்த விமானத்தில் மார்ச் 24-ம் தேதி சென்னைக்கு வந்துள்ளார்.

சந்தேகத்தின்பேரில் தாமாகவே மருத்துவப்பரி சோதனைக்கு முன்வந்த இவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த நிலையில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே