CAA-க்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம்…

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரி இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிவித்த, சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துக்கு  உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தடையை மீறி போராட்டம் நடக்கும் என்ற அறிவிப்பை அடுத்து சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

CAA, NRC-க்கு எதிராக சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கடற்கரை சாலையில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

CAA, NRC மற்றும் NPR-க்கு எதிராக சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இன்று தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அனுமதியின்றி இன்று போராட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை முதலே போராட்டக் காரர்கள் கடற்கரை சாலையில் திரண்டனர். இதனால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

சிசிடிவி மற்றும் ட்ரோன் கேமரா மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே