சமந்தா பிறந்தநாள் : கேக் செய்து அசத்திய நாகசைதன்யா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா இன்று(ஏப்., 28) அவரது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

கொரானோ ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்தே சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்த சமந்தா கடந்த சில நாட்களாக மீண்டும் அதில் பிஸியாக இருக்கிறார்.

இன்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

அதற்காக அவருடைய கணவர் நாகசைதன்யாவே பிறந்த நாள் கேக்கைத் தயார் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் சமந்தா.

மேலும், அந்த கேக்கை வெட்டுவதற்கு முன்பாக அவர் பிரேயர் செய்துள்ளார். “நான் எதற்காக கடவுளை வேண்டுகிறேன் என்பதை யூகிக்க வேண்டியதில்லை. குடும்பம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவிற்கு பல சினிமா பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே