பேராசிரியர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனைஒட்டி, கீழ்பாக்கத்திலுள்ள அன்பழகன் வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், சிறிது நேரம் பேராசிரியர் க.அன்பழகனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி கலந்துரையாடினார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று!

மதவாத-அடிமை சக்திகளை முறியடித்து, சுயமரியாதைமிக்க-சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே