உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் கவலை வேண்டாம், சிறிது நேரத்திற்குள்ளேயே இந்த ஸ்னாக்கை செய்து நீங்கள் அசத்தலாம். டீ, காபி குடிக்கும் சமயத்தில் முட்டை மற்றும் உருளைக்கிழங்கு கட்லெட் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த கட்லெட்டை எப்படி செய்யலாம் என்பதை பாப்போம்.
வீட்டில் குழந்தைகளுக்கு ஏதேனும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அதுவும் ஆரோக்கியமான ஈஸியான ஸ்னாக்காக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், முட்டை மற்றும் உருளைக்கிழங்குகள் கட்லெட் ரெசிபியை வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க. கட்டாயம் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உங்கள் வீட்டிற்கு திடீரென விருந்தாளிகள் வந்தால் கவலை வேண்டாம், சிறிது நேரத்திற்குள்ளேயே இந்த ஸ்னாக்கை செய்து நீங்கள் அசத்தலாம். டீ, காபி குடிக்கும் சமயத்தில் முட்டை மற்றும் உருளைக்கிழங்கு கட்லெட் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். இந்த கட்லெட்டை எப்படி செய்யலாம் என்பதை பாப்போம்.
தேவையான பொருள்கள்:
பச்சை முட்டை – 1
வேகவைத்த முட்டை – 4
உருளைக்கிழங்கு – அரை கிலோ
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – 1
தேங்காய் பால் – அரை கப்
மைதா மாவு – 2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
ரொட்டித்தூள் – தேவையான அளவு
பொரிக்க எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். வேக வைத்து முட்டைகளை இரண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும். இது தவிர ஒரு சிறிய பவுலில் பச்சை முட்டை ஒன்றரை உடைத்து ஊற்றி அதனுடன் சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும். இதற்கடுத்ததாக, மசித்த உருளைக்கிழங்குடன் தேங்காய் பால், வெங்காயம், கொத்தமல்லி, மைதா மாவு போட்டு பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். உருண்டையை கையில் வட்டமாகத் தட்டி, வெட்டி வைத்த முட்டையை நடுவில் வைத்து மூட வேண்டும். இதனை முட்டை கலவையில் முக்கி, ரொட்டித்தூளில் பிரட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்த கட்லெட்களை எண்ணெயில் போட்டு சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி. உங்களுக்கு வேண்டுமானால் வேகவைத்த முட்டையை சிறு சிறு துண்டுகளாக கூட வெட்டி உருளைக்கிழங்கு கலவையுடன் கலந்து, அதனை கட்லெட் வடிவத்திற்கு தட்டி கொள்ளலாம்.
முட்டை: உலகில் அதிகளவு மக்களால் விரும்பப்படும் ஒரு ஆரோக்கியமான உணவு என்றால் அது முட்டைதான். அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் கூட முட்டையில் இருக்கும் ஆரோக்கியத்திற்காகவும், அதன் சுவைக்காகவும் முட்டையை மட்டும் சாப்பிடுகின்றனர். ஏனெனில் முட்டையில் புரதம் மற்றும் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை கட்டாயம் உடலுக்கு தேவை.
உருளைக்கிழங்கு: உலகின் அனைத்து நாட்டு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகின்றன பிரதான 10 உணவு வகைகளில் உருளைக்கிழங்கு இடம்பெறுகிறது. உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாகவும் உருளை கிழங்கு கருதப்படுகிறது.