இடைத்தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக அமையும் : வைகோ

இடைத்தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான புள்ளியாக அமையும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக நெல்லை வந்த அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்றத் தலைவர் ராமசாமி மற்றும் எம்.பி.வசந்தகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்த அரசை வீழ்த்த மக்கள் காத்திருப்பதாகவும், அதற்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே