மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அடுத்துள்ள செங்குளம் பகுதியில் அழகர்சாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் உயரே சென்று வெடிக்கக்கூடிய பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தபோது எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், லட்சுமி, அய்யம்மாள், சுருளியம்மாள்,வேல்தாய் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர்.

மேலும், 2 பெண் தொழிலாளர் உள்ளிட்ட 3 பேர் 80 சதவீத தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு, விருதுநகர் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் அழகர்சாமி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே