சென்னையில் பல்வேறு பணிக்கு செல்லும் பணியாளர்கள் பாஸ் பெற என்ன செய்ய வேண்டும்?

சென்னையில் https://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணிபுரியலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அறிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பல்வேறு தளர்வுகளை மாநில அரசு பட்டியலிட்டு இருந்தது.

தற்போது சென்னையில் பிளம்பர், எலெக்ட்ரீஷியன், வீட்டுவேலை பணியாளர்கள் பாஸ் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள், வரைமுறைகள் சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி https://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பணியாளர்களும் மேற்கண்ட இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்சாலைகளும், ஐடி நிறுவனங்களும் http://tnepass.tnega.org என்ற இணையதளத்தின் வழியே உரிய அனுமதி பெற்று பணியாற்றலாம்.

நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை நிறுவனத்தின் பிரத்யேக பேருந்துகள் / வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரவேண்டும்.

அந்த வாகனங்களில் 50 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே தக்க தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்து வர வேண்டும்.

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் கிராமப்புறத் தொழில்கள் மற்றும் கிராமப்புற, தனி கடைகளுக்கு அனுமதி தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே