நாயை விரட்ட சொன்ன தந்தை… உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்

செல்லமாக வளர்த்து வந்த நாயை குடும்பத்தினருக்கு பிடிக்காததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த கவிதா என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீஸர் என்ற நாயை வளர்த்து வருகிறார்.

வேலை முடித்துவிட்டு வீடு திரும்பும் கவிதாவின் காலடி சப்தத்தைக் கேட்டு விட்டால் வீட்டிற்குள் இருக்கும் சீஸர் துள்ளிக்குதித்து குரைத்துக் கொண்டே கதவை சுரண்டி எடுத்துவிடுமாம்.

இது கவிதாவின் பெற்றோருக்கு எரிச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.

இதனால் சீஸரை வீட்டை விட்டு துரத்தி விடலாம் என அவர்கள் கூறியதால், மனமுடைந்த கவிதா கடந்த 29ஆம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கவிதாவை காணாமல் சீசர் உணவுகூட உட்கொள்ளாமல் சோகத்தில் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே