பல ஆண்டுகளுக்கு பின்னர் இளையராஜா – பாரதிராஜா சந்திப்பு

நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜவும் தேனியில் சந்தித்து பேசியுள்ளனர்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்பி மற்றும் புகைப்படங்களை இயக்குநர் பாரதிராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் இயலும் இசையும் இணைந்தது என பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

பாரதிராஜாவும், இளையராஜாவும் தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பல படைப்புகளை உருவாக்கி வெற்றி கண்டவர்களாவர்.

இருவரது கூட்டணியில் உருவான படங்கள் மற்றும் திரைஇசைப் பாடல்கள் அனைத்தும், மெஹா ஹிட் அடித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விலகி இருந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் தங்கள் சொந்த ஊரில் சந்தித்திருப்பது அவர்களின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே