விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் செங்கோட்டையன்

ஈரோடு அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் ஒத்தகுதிரை மற்றும் தாசம்பாளையம் பகுதி இடையே சாலையில் சென்று கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரே வந்த வாகனம் மோதியதில் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தன.

அப்போது அந்த வழியாக வந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளித்து தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களை தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய குடும்பத்தினருக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே