மதுரை : கணவர் மது அருந்தி விட்டு வந்ததால்.. மனைவி, மகளுடன் தீக்குளித்தார்!

கணவர் மது அருந்தி விட்டு வந்ததால் அதிர்ச்சியடைந்த மனைவி மகளுடன் சேர்ந்து தீக்குளித்துவிட்டார். இந்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

ஊரடங்கினால் மதுக்கடைகள் மூடப்பட்டது.. இதனால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்… சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி அதை குடிக்க ஆரம்பித்தனர்.

மேலும் பலர் தண்ணி அடிக்காமலேயே திருந்தி.. இந்த 45 நாட்களையும் பழக்கப்படுத்தி கொண்டனர்.

இந்நிலையில் திடீரென தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதாக அறிவித்தது.

இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.

மூடிய கடைகள் மூடியபடியே இருக்கட்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மது அருந்தினால் குடும்பங்களில் வன்முறை பெருகும் என்று நேற்றுகூட அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எனினும் போலீஸ் பாதுகாப்புடன் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுரையிலும் குடிமகன்கள் வரிசையில் நின்று மது வாங்கி சென்றனர்.

இந்நிலையில் மதுரையில் முதல் வன்முறை பலி நிகழ்ந்துள்ளது. மதுரை அலங்காநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி பரமேஸ்வரி.. இவருக்கு 38 வயதாகிறது..

இவர்களுக்கு 18 வயதில் அர்ச்சனா என்ற மகள் உள்ளார்.

சிவகுமாருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது.. இன்று முதல்நாள் கடை திறந்தவுடனேயே சிவக்குமார் மது வாங்கி குடித்துள்ளார்..

இதனால் அதிர்ச்சி அடைந்த பரமேஸ்வரியும், அர்ச்சனாவும் சிவக்குமாருடன் தகராறில் ஈடுபட்டனர்.. வாக்குவாதம் முற்றியது..

ஒருகட்டத்தில் மனம் உடைந்த தாயும் – மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவிட்டனர்.. உடம்பெல்லாம் தீ பரவ இருவரும் அலறி துடித்தனர்.

அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர்.. தீக்காயத்துடன் துடித்து கொண்டிருந்த பரமேஸ்வரி, அர்ச்சனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்..

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த குடியால் அவதிப்பட போகுதோ!!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே