பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை – பாதிரியார் உள்பட 4 பேர் கைது..!!

பிரபல பாடகியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பாதிரியார் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் தேதி ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர் சென்னையில் தங்கை வீட்டில் வளர்ந்து வந்த தனது 15வயது மகளுக்கு கடந்த 8ஆண்டுகளாக, உறவினர்கள் மற்றும் பாதிரியார் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாக கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிரியார் ஹென்றி உட்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த பாதிரியார் ஹென்றி, பாடகியின் சகோதரி, அவரது கணவர், உறவினர் என நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சொத்து தகராறு காரணமாக பாடகி பொய் புகார் அளித்துள்ளதாக அவரது தாய் குற்றம் சாட்டியுள்ளார். இருப்பினும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே