சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியில்லை..!!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியில்லை என மருத்துவமனை டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில்கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நேற்று 3 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதியானது. அத்துடன் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 37 பேர் உயிரிழந்தனர்.குறிப்பாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதுவரை 1,618 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நிலையில் ஆயிரத்து 104 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 551 நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடனும், 93 பேருக்கு தீவிர ஆக்சிஜன் , 72 பேர் அதிதீவிர ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா அறிகுறி இல்லாமலோ, லேசான காய்ச்சல் உள்ளவர்களோ தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு வரலாம் என்றும் இல்லை என்றால் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி இல்லை தனியார் நிறுவனத்திடம் இருந்துதான் தினமும் ஆக்சிஜன் பெறப்படுகிறது என மருத்துவமனை டீன் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்படுவதாக பரவி வரும் தகவல் தவறானது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே