போலீசுக்கு சவால் விடும் போலி மாடல் மீராமிதுன்..!

திருமணம் ஆனதை மறைத்து மிஸ் சவுத் இந்தியா போட்டியில் பங்கேற்று பட்டம் பெற்றவர் மீராமிதுன்.

அவரது மோசடி வெளிச்சத்திற்கு வந்ததால் மிஸ் சவுத் இந்தியா பட்டம் பறிக்கப்பட்டது.

இதனால் போலியான மாடல் என்று விமர்சிக்கப்பட்ட மீராமிதுன் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் மும்பையில் பதுங்கி இருந்தார்.

சென்னை திரும்பிய அவர், தன் மீது இரு வழக்குகள் பதிவு செய்த காவல்துறையினருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.

தமிழக போலீசாரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்

தமிழகத்தில் தனக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்பதால் முப்பைக்கு சென்று விட்டதாக கூறினார் மீரா மிதுன். 

தான் நடத்திய அழகி போட்டியை இரண்டு போலீசார் பணம் வாங்கிக் கொண்டு தடுத்து நிறுத்தியதால் பிரச்சனையில் சிக்கியதாக கூறி ஒருமையில் விமர்சித்தார்.

அரசியலில் குதிக்கப்போவதாக தெரிவித்துள்ள மீராமிதுன், தான் எடுத்து வைக்க போகும் அடுத்த ஸ்டெப்பால் பல போலீசார் வேலை காலியாக போவதாக பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.

மீரா மிதுன் மீது இரண்டு முறை வழக்கு பதிவு செய்யப்பட்டும், காவல்துறையினர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் தப்பவிட்ட நிலையில் போலீசாருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும், சவால் விடுக்கும் விதமாகவும் மீரா மிதுன் பேசியிருப்பது குறிப்பிடதக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே