தொடர்மழை எதிரொலி: வெங்காயம், காய்கறிகளின் விலை உயர்வு

சென்னையின் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்து இருப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் கடந்த மாதம் கிலோ 90 ரூபாய் வரை விற்பனையானது.

சில நாட்கள் நீடித்த இந்த அதிகப்படியான விலை பின்னர் படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயம் இன்று கிலோ 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மழை காரணமாக மத்திய பிரதேசத்தில் இருந்து வரும் வெங்காயம் பெருமளவில் அழுகியதால் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வணிகர்கள் கூறுகிறார்கள்.

வெங்காயத்தை போலவே கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் இன்று 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கத்திரி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற காய்கறி விலையும் கணிசமாக உயர்ந்து இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே