தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும் – தலைமைத் தேர்தல் அதிகாரி

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளன.

அதனால் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.

தற்போது அனைத்து கட்சிகளிலும் கூட்டணி பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் அனைத்தும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது பணியை தொடங்கி விட்டது.

வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என்றும் அந்த மாதத்திற்குள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

ஜனவரி 15க்கு பதிலாக 20ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே