உள்ளாட்சித் தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த தேர்தல் ஆணையர் உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்துமாறு அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி பங்கேற்றார்.

அப்போது வேட்புமனுத் தாக்கல், வேட்புமனு பரிசீலனை, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்துவித தேர்தல் பணிகளையும் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் நடத்த உத்தரவிட்டார். 

அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் பார்வையாளர்கள் செயலாற்ற வேண்டும் என்றும் ஆணையர் பழனிசாமி அறிவுறுத்தினார்.

சில இடங்களில் ஊராட்சித் தலைவர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அவர் இந்த உத்தரவை அளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே