தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில் மதியம் 2 மணியளவில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதியில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

இதேபோல் செங்கல்பட்டு மாமல்லபுரம் புதுப்பட்டினம் திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னையில் இரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

பகலில் மேக மூட்டம் காணப்பட்ட நிலையில் இரவில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது.

சேப்பாக்கம், நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மழை பெய்தது.

மழை ஓய்ந்த பின்பும் ஈரப்பதத்துடன் குளிர்ந்த காற்று வீசியது. காலையிலும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலான மழை பெய்து வருகிறது.

தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில், புறநகர் பகுதிகளான கோரம்பள்ளம், கூட்டாம்புளி உள்ளிட்ட இடங்களில் நேற்று சாரல் பெய்தது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்றிரவு ஆத்தியூர், மாத்துர், செந்துறை, நக்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே