ரேப் இன் இந்தியா என விமர்சனம் செய்த ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் அளித்தார்.
ரேப் இன் இந்தியா என்ற ராகுல்காந்தியின் விமர்சனம் நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜக பெண் எம்.பி.க்கள், தேர்தல் ஆணையத்தில் ராகுல்காந்தி மீது புகார் அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இரானி, மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா என்ற ராகுல் காந்தியின் பேச்சு குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.