மே 2ஆம் தேதி திட்டமிட்டப்படி வாக்கு எண்ணிக்கை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி மே 2ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

வாக்கு எண்ணும்போது தொகுதிக்கு எத்தனை மேசைகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் சாகு ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையால் வாக்கு எண்ணிக்கையில் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடைபெற்ற நிலையில், திட்டமிட்டபடி தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று மாலை 5 மணிக்கு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் தலைமை அதிகாரி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள மாவட்டங்களின் சுகாதார அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தள்ளிப்போகாது, மே 2ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டியளித்துள்ளார்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே