திருச்சி திருவெறும்பூரில் பட்டா பெயர் மாற்றத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர் எழில் நகரைச் சேர்ந்த செல்வம் தான் வாங்கிய வீட்டுமனைக்கு பட்டா பெயர் மாற்றம் செய்து கொடுக்க வேண்டி திருவெரும்பூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால் அதற்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென நில அளவையர் சுரேஷ் நிர்பயத்துள்ளார். இதனை தொடர்ந்து செல்வம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை செலவத்திடம் கொடுத்து அதனை சுரேஷிடம் கொடுக்குமாறு கூறி உள்ளனர்.
அதன்படி செல்வம் பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.