நாட்டின் பாதுகாப்பை விட மிகப்பெரிய வேலை எதுவும் இல்லை என ரஃபேல் போர் விமானங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியாணா மாநிலம் அம்பாலாவை வந்தடைந்தன.
இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படையின் 2 சுகோய் போர் விமானங்கள் வரவேற்று அழைத்து வந்தன.
இந்திய விமானப்படை தளபதி பாதுரியா 5 ரஃபேல் போர் விமானங்களையும் அம்பாலா விமானப் படை தளத்தில் வரவேற்றார். பின்னர் இந்திய விமானப்படையில் அவை இணைக்கப்பட்டது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,
இந்நிலையில், அம்பாலா விமானப்படைத் தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கும் விடியோவைப் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய நற்பண்பு எதுவும் இல்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய விரதம் எதுவும் இல்லை; தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய வேலை எதுவும் இல்லை என்றும் சம்ஸ்கிருத மொழியில் பதிவிட்டுள்ளார்.