வட மாநிலங்களில் திடீர் நில அதிர்வு!

வட மாநிலங்களில், திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்தனர்.

இந்தியா, நேபாள எல்லையை மையமாகக் கொண்டு, பூமிக்கு அடியில், 1.3 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5-ஆக பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.

டெல்லி, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர். லேசான நில அதிர்வு என்பதால், பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 420 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே