#BREAKING : டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா

டெல்லியில் நடைபெற்ற ஒரு அமைப்பு சார்ந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

புதுடெல்லி மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 1500 நபர்களில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள தகவலில், புதுடெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்றவர்களில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பிட்ட அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களில் 981 பேரின் விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ளவர்களின் விவரங்களை சேகரித்து அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 1500 பேர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டனர் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக, தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இன்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே