விடுதலை சிறுத்தைகளால் கலக்கத்தில் காயத்திரி..! டிவிட்டர் கணக்கு முடக்கம்

இந்து மத வழிபாட்டு தளங்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி தொல். திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணியினர் செருப்புகளை வீசி போராட்டம் நடத்தினர். இதற்கிடையே காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

நடிகரின் தோளில் அனாசயமாக தனது காலை தூக்கிபோட்டு தனது நடன திறமையை காட்டியதால் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை காயத்திரி ரகுராம்.

போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் நடிகை காயத்திரி ரகுராம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோவிலாக இருக்கும் என்று மேடையில் பேசி இருந்தார்.

மேலும் இந்து கோவில்கள், இந்து மத கடவுள்களை தொடர்ந்து விமர்சிக்கும் விதமாக திருமாவளவன் பேசி வருவதாக கூறி ட்விட்டரில் எதிர் கருத்து பதிவு செய்தார் நடிகை காயத்திரி ரகுராம். அதில் இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று காயத்ரி ரகுராம் குறிப்பிட்டிருந்தார்.

இந்து கோவில்கள் குறித்த பேச்சுக்கு திருமாவளவன் வருத்தம் தெரிவித்து அறிக்கைவிட்ட போது , நடிப்பு பத்தல கிளிசரின் போட்டுக்கங்க என்று மற்றொரு பதிவை வெளியிட்டார் காயத்ரி ரகுராம்.

இதனால் காயத்ரி ரகுராமுக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தரப்பில் இருந்து காயத்திரிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் விசிக மகளிரணியினர் காயத்திரி வீட்டை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

போலீசார் தடுத்து நிறுத்தியதால் மகளிரணியை சேர்ந்தவர்கள் தங்கள் காலில் கிடந்த செருப்பை கழற்றி வீசி காயத்திரிக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தனக்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துவதால் தான் பயந்துவிடப்போவதில்லை என்றும் அந்த கட்சியினர் தனக்கு எதிராக எவ்வளவு கீழ்நிலைக்கும் செல்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

மேலும் தான் பின்பற்றும் இந்து மதத்திற்காக தனது உயிரையும் கொடுக்க தயார் என்று கூறிய காயத்திரி, நவம்பர் 27 ந்தேதி காலை 10 மணிக்கு மெரீனாவிற்கு தனியாளாக தான் வருவதாகவும் துணிவிருந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தன்னை அங்கு வந்து எதிர்கொள்ளட்டும் என்றும் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் காயத்திரி ரகுராமின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் இருந்து பேஸ்புக் நேரலையில் தங்கள் கட்சியினருடன் பேசிய திருமாவளவன், விரல் கொண்டு நசுக்கும் எறும்பை வேல் கொண்டு தாக்கலாமா ? என்றும் பெண்களை வைத்து தொழில் செய்து, ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ள தற்குறிகளுக்கு என்ன தெரியும் என்றும் அவிழ்த்து போட்டும் ஆடைகளை அகற்றியும் நடிப்பது அவர்களுக்கு தொழில் எனவே அவர்களுக்கு எதிராக போராடுவது வீண் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே