நாட்டிலேயே முதல்முறையாக டெல்லியில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சேவை..!!

நாட்டின் முதல் டிரைவர் இல்லாத ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 

முழுவதும் தானியங்கி முறையில் இயங்குவதால் ஓட்டுநர் இல்லாத இந்த ரயில்களில் மனிதத் தவறுகள் களையப்படுகின்றன.

மெஜந்தா மார்க்கத்தில் இந்தச் சேவை துவக்கப்பட்ட பிறகு டெல்லி மெட்ரோவின் பிங்க் மார்க்கத்திலும் 2021-ஆம் ஆண்டு மத்தியில் ஓட்டுநர் இல்லாத ரயில் சேவை இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நாட்டின் முதல் முழுமையான (automatic) டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சேவையை 37 கி.மீ. மெஜந்தா பாதையில் (ஜனக்புரி மேற்கு முதல் தாவரவியல் பூங்கா மெட்ரோ நிலையம் வரை) காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே