டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசினை சமாளிக்க பொதுமக்களுக்கு சில யோசனைகளை அரசு வழங்கியுள்ளது.
திறந்தவெளியில் விளையாடும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களை தற்போது தவிர்ப்பது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகம் இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் காற்றில் உள்ள மாசு கீழிறங்கும்.
எனவே அந்த நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வது தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தரமான முகமூடி உறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும், மூச்சிரைக்கும் வகையிலான உடற்பயிற்சியை தவிர்ப்பது நலம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதிகப்படியான தண்ணீர் பருக வேண்டும் எனவும், வாழைப்பழம் போன்ற பழவகைகளையும், கீரை போன்ற பச்சை காய்கறிகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்ஹீலர், நெபுலைசர் போன்ற மூச்சு கருவிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருத்தல் நல்லது எனவும், வீட்டில் உள்ள கதவு ஜன்னல்களை சரியாக மூடி வைப்பது, சூடான நீராவி பிடிக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவாச கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.