முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் திடீரென்று சந்தித்து பேசியுள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் பட விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி உடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார் .

தியேட்டர்களில் பார்வையாளர் அனுமதி 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்டர் படத்தை பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13 வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

விஜய் பட தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட படக்குழு முதல்வரை சந்தித்த போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் உடனிருந்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது . 

இதைத்தொடர்ந்து திரை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

இருப்பினும் புதிய படங்கள் தியேட்டரில் இன்னும் ரிலீசாகவில்லை.

அதேசமயம் 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கான ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க கோரி மாஸ்டர் பட குழு கோரிக்கை வைத்துள்ளதாம்.

அதேசமயம் அதிமுக அரசை நடிகர் விஜய்யையும்ம், விஜய்யை அதிமுகவும் விமர்சித்து வந்த நிலையில், தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நடிகர் விஜய் முதல்வருடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளது தமிழக அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே