இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவிய நிலையில், தற்போது 3, 374 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் தமிழகத்திலும் 400க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டது.
இந்நிலையில் தமிழக குடிமகன்கள் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் செங்கல்பட்டில், மது போதைக்காக குளிர்பானத்தில் வார்னிஷ் கலந்து குடித்ததில் சிவராமன் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் போதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோஷனை கலந்து குடித்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.