திமுக தான் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்கியது – முதல்வர் பழனிசாமி

தமிழக அரசு தேசிய விருதுகள் பெற்றதை எதிர்க்கட்சித் தலைவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்யுள்ளார்.

சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

பின்னர் குட்டிக்கதையை கூறிய அவர், எதிர்க்கட்சிகள் தமிழக அரசின் நடவடிக்கைகளைக் கண்டு பொறாமைப்படுவதாகக் குறை கூறினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கொண்டுவந்ததே திமுகதான் என்றும் குற்றம்சாட்டினார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிபடக் கூறினார். 

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், விலங்குகள் மீது அதிக பாசம் வைத்திருந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்று கூறினார்.

தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு பாராட்ட மனமில்லை என்று குற்றம்சாட்டினார். 

விழாவில் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் எண்ணத்தில் உதித்ததுதான் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் செல்லப்பிராணிகளுக்கான ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே