மேகதாதுவிற்கு அனுமதி வழங்க கூடாது – வைகோ

காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு அணைக்கட்டுவதற்கு, மத்திய அரசு அனுமதிக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியிருக்கிறார்.

கர்நாடகம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்போ, உச்சநீதிமன்ற உத்தரவுகளோ அனுமதிக்கவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வருவதற்கு வழி இல்லாமல் போகும் என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின், உயிர் ஆதாரமான காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதி வழங்கக் கூடாது என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே