சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய நடிகர் ரஜினிகாந்த்

பைரவி திரைப்படம் மூலமாக தன்னை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு அறிவித்தபடி நடிகர் ரஜினிகாந்த் வீடு வழங்கியிருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் விநாயகம் தெருவில் 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரஜினிகாந்த் வீடு வாங்கி கொடுத்திருக்கிறார்.

சொந்த வீடு இல்லாமல் இருந்த கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுப்பதாக பாரதிராஜா நடத்திய பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

அதன்படி அவருக்கு வீடு வாங்கி கொடுத்து, “சொல்வதை தான் செய்வேன்; செய்வதைத்தான் சொல்வேன்” என்ற தனது பட டயலாக்கை நிஜமாக்கி இருக்கிறார் ரஜினிகாந்த்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே