“நாங்கள் கைகாட்டும் கட்சி தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும்”… பாஜக தலைவர் எல்.முருகன் பேச்சு..!!

2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கை காட்டும் கட்சியே மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பாஜக தலைமையிடமான கமலாலயாவில் அக்கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதாவது இன்னும் 6 மாதங்களில் தமிழக அரசியலில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தேர்தலில் பாஜக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து சட்டப்பேரவைக்கு அனுப்ப வேண்டும்.

பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் மாவட்டத் தலைவருக்கு ‘இன்னோவா கார்’ பரிசு அளிக்கப்படும். தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என தமிழக பாஜக தலைவர் முருகன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான பேர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அமர்ந்திருப்பார்கள்” என்று பேசியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே