ரஜினி உட்பட யார் கட்சி தொடங்கினாலும் அடுத்து திமுக தான் ஆட்சி அமைக்கும் : திருநாவுக்கரசர்

ரஜினி உட்பட யார் கட்சி தொடங்கினாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக களப்பணியை விட பணப்பணியில் அதிகமாக ஈடுப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

நாட்டில் ஜனநாயகத்திற்கு புறம்பாக ஆட்சி நடைபெறுவதாக குறிப்பிட்ட திருநாவுக்கரசர், பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதாக விமர்சித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே