சுயேட்சை கவுன்சிலர்களை டெம்போவில் ஏற்றிச் சென்ற திமுக…

கோவில்பட்டியில் சுயேட்சை ஒன்றிய கவுன்சிலர்களை திமுகவினர் கடத்திச் செல்வதாகக் கூறி, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களில் திமுக 8 இடங்களையும், சிபிஐ.-1 இடத்தினையும், அதிமுக 5 இடங்களையும், தேமுதிக 1 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 இடத்திலும் வெற்றி பெற்றனர்.

ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க 10 கவுன்சிலர்கள் தேவை என்பதால், அதிமுக, திமுக இரு கட்சிகளும் சுயேட்சை கவுன்சிலர்களை சார்ந்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற வந்தவுடன் திமுகவினர், திமுக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்களை ஒரு டெம்போ வேனில் ஏற்றிக் கொண்டு செல்ல முயன்றனர்.

இதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் திமுகவினர் அதிமுகவை மீறி வேனில் கவுன்சிலர்களை கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக, தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே