உள்ளாட்சி தேர்தல்: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

உண்மையாகவும், நேர்மையாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இருந்தால் 80 முதல் 90 சதவீத வெற்றியை திமுக பெற்றிருக்கும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் திமுக வெற்றியை அடுத்து மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி வாழ்த்து பெற்றார்.

பின்னர் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் நிர்வாகிகளுடன் இருவரும் மரியாதை செலுத்தினர். 

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு கிடைத்த வெற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே