CAA பற்றி பேசுவோர், அகதிகள் முகாமை பற்றி பேசுவதில்லை – நிர்மலா சீதாராமன்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விகளுக்கு பொது வெளியிலும், நாடாளுமன்றத்திலும் பதில் அளிக்க தயார் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கருத்தரங்கில் பேசிய அவர், எவரையும் வதைக்கும் நோக்கில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படவில்லை என கூறினார்.

குடியுரிமை சட்டத்துடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை சேர்த்து குழப்ப வேண்டாம் என வலியுறுத்திய அவர், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் மாநிலத்துக்கு வரையறுக்கப்பட்ட ஒன்று என விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை, மாநில அரசுகள் நிறைவேற்ற மறுப்பது சட்டவிரோதமானது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது எனவும்; குடியுரிமை திருத்த சட்டத்தை பற்றி பேசுவோர், அகதிகள் முகாமை பற்றி பேசுவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே