பட்டதாரி தற்கொலை விவகாரம்.. வங்கி மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திமுக எம்.பி மனு!

கல்வி கடனை திரும்ப செலுத்த வங்கி நிர்வாகம் தொந்தரவு செய்ததால், தற்கொலை செய்து கொண்ட வாலிபரின் உயிரிழப்புக்கு காரணமான வங்கி ஏஜெண்ட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக மற்றும் காங் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கள்ளக்குறிச்சி அருகேவுள்ள ரிஷிவிந்தியம் தொகுதி புது வெங்கலம் கிராமத்தை சேர்ந்த முதல் பட்டதாரி பாண்டுரங்கன் என்பவர் பொறியியல் படிப்பிற்காக தனியார் வங்கி மூலம் கல்வி கடன் பெற்று படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வங்கியில் இருந்து கடன் வசூலிக்கும் கலெக்ஷன் ஏஜெண்டுகள் பாண்டுரங்கனை தொந்தரவு செய்து தொடர்ந்து அச்சுறுத்தி வந்ததால் மனமுடைந்தவர் முகநூலில் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரனிடம் வங்கியின் ஏஜெண்ட்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் கவுதம சிகாமணி, பாண்டுரங்கணின் பெற்றோருடன் சேர்ந்து மனு அளித்தார்.

அதே போல காங்கிரஸ் கட்சியின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கிரண் குராலாவிடமும் மனு அளித்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர், கல்வி கடன்களை ரத்து செய்ய கோரி பாராளுமன்றத்தில் கோரிக்கை வைக்கபட்டுள்ளதாகவும்;

இம்மாணவரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி மாநில அரசு வழங்க வேண்டும் எனவும், பேட்டியளித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன்களை ரத்து செய்யபடும் எனவும் அவர் தெரிவித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே