நிறவெறியை ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாது – போப் பிரான்சிஸ்

அமெரிக்காவில், கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவர், கால் முட்டியால் கழுத்தில் நெருக்கியதில், ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ் பிளாய்டு(46) சமீபத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து, கடந்த, ஒரு வாரத்துக்கு மேலாக, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன பாகுபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகளை சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவத்துக்கு, போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவம் அமெரிக்காவின் சுய அழிவு மற்றும் சுய தோல்வி என வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜார்ஜ் ஃப்ளையாட் மரணம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இனவாதத்தைக் கடந்து செல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

அத்துடன் மனிதத்தைக் காப்பதற்காக, இனவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் அதைத் தடுக்க வேண்டும் என்றும், கண்களை மூடிக்கொண்டு இனவாதத்தைக் கடந்து செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் அமெரிக்கர்கள் வன்முறையால் எதைப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், வன்முறை இழப்பை மட்டுமே தரும் எனவும் கூறியுள்ளார்.

எனவே தேச அமைதி மற்றும் ஒருமைப்பாடு கருதி போராட்டக்காரர்கள் பொறுமை காக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே