திமுக எம்எல்ஏ மா.சுப்ரமணியத்தின் இளைய மகன் உயிரிழப்பு..!!

சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏ மா. சுப்ரமணியனின் இளைய மகன் அன்பழகன் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 34.

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான மா. சுப்ரமணியத்துக்கும், அவரது மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.

சுப்ரமணியனின் மகன் அன்பழகன் கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய நிலையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டு இன்று காலமானார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே