நீட் தேர்வு குளறுபடி..; திருத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

திருத்தப்பட்ட நீட் தேர்வு பகுப்பாய்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து http://nta.ac.in இணையதளத்தில் திருத்தப்பட்ட முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

பழைய அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானதை தொடர்ந்து புதிய நீட் தேர்வு பகுப்பாய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், தெலுங்கானா ,உத்தரகாண்ட் மாநிலங்களின் பகுப்பாய்வு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என குளறுபடிகள் அம்பலமானதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டன.

முன்னதாக தேர்வு எழுதிய மாணவர்களை விட அதிகம் பேர் தேர்ச்சி, மாநில தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது என குளறுபடிகள் அம்பலமானதை தொடர்ந்து தேர்வு முடிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

திரிபுராவில் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேரில் 1738 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 49.15% என அறிவிக்கப்பட்டது.

இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதிய நிலையில் தேர்ச்சி பெற்றது 37, 301என அறிவிப்பு வெளியாகியது.

உ.பி.யில் 1.56 லட்சம் பேரில் 7 ஆயிரத்து 323 பேர் பாஸ் ஆன நிலையில் தேர்ச்சி விகிதம் 60.79% என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே