இளைஞர்களின் வாழ்க்கையை அழிக்கும் மோடி,அமித்ஷா – ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்து வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதாரத்துக்கு இழைக்கப்பட்ட சேதம் ஆகியவற்றால் இளைஞர்களுக்கு ஏற்பட்ட கோபத்தை, மோடியும், அமித்ஷாவும் எதிர்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

அதனால்தான் அவர்கள் நமது அன்பை பிரிப்பதுடன், வெறுப்பினை பரப்புகிறார்கள் எனவும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்போடு பதில் அளிப்பதன் மூலமே அவர்களை நாம் தோற்கடிக்க முடியும் என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே